×

காங்கிரசின் முதல் வாக்குறுதி நிறைவேற்றம் கர்நாடகா அரசு பஸ்களில் மகளிருக்கு இலவசம்: முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார்

பெங்களூரு: கர்நாடகாவில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம் எனும் சக்தி திட்டத்தை நேற்று முதல்வர் சித்தராமையா பெங்களூருவில் துவக்கி வைத்தார். கர்நாடக சட்டப்பேரவை தேர்தலின் போது காங்கிரஸ் கட்சி சார்பில் அரசு பேருந்துகளில் மகளிருக்கு இலவசம், அனைத்து வீடுகளுக்கும் 200 யூனிட் இலவச மின்சாரம், ஒவ்வொரு குடும்பத்தின் பெண் தலைவிக்கு மாதம் ₹2,000, பிபிஎல் குடும்பத்தின் ஒவ்வொரு உறுப்பினருக்கும் 10 கிலோ அரிசி இலவசம், 18-25 வயதுக்குட்பட்ட வேலையில்லா பட்டதாரிகளுக்கு மாதந்தோறும் ₹3,000 மற்றும் வேலையற்ற டிப்ளமோதாரர்களுக்கு ₹1,500 வழங்கப்படும் என 5 வாக்குறுதிகள் அளிக்கப்பட்டன.

அதில் முதல் வாக்குறுதியாக அனைத்து மகளிருக்கும் அரசு பேருந்துகளில் இலவச பயணம் எனும் சக்தி திட்டம் நேற்று முதல் தொடங்கப்பட்டது. பெங்களூரு விதான சவுதா வளாகத்தில் போக்குவரத்து துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி முன்னிலையில் நடந்த விழாவில் துணை முதல்வர் டிகேசிவகுமார் முன்னிலையில் முதல்வர் சித்தராமையா இத்திட்டத்தை தொடங்கி வைத்தார். அதன்பின் சக்தி திட்டத்தின் சின்னத்தையும் முதல்வர் சித்தராமையா அறிமுகம் செய்தார். இதைத்தொடர்ந்து பஸ்சில் மெஜஸ்டிக் சென்ற முதல்வர் சித்தராமையா, இலவச டிக்கெட் வழங்கி பெண் பயணிகளுடன் மீண்டும் விதான சவுதாவுக்கு பயணித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

The post காங்கிரசின் முதல் வாக்குறுதி நிறைவேற்றம் கர்நாடகா அரசு பஸ்களில் மகளிருக்கு இலவசம்: முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார் appeared first on Dinakaran.

Tags : Congress ,Karnataka government ,Chief Minister ,Siddaramaiah ,Bengaluru ,Karnataka ,
× RELATED ஆட்சி செய்யாமல் காங்கிரஸ் வசூல் செய்கிறது : பிரதமர் மோடி